Enable Javscript for better performance
மரத்தில் ஆட்டோ மோதல்: ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம் - Dinamani

சுடச்சுட

    

    மரத்தில் ஆட்டோ மோதல்: ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம்

    By கோவில்பட்டி  |   Published on : 28th August 2013 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை  ஆட்டோ, சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியதில், ஓட்டுநர் உள்பட மூவர் காயமடைந்தனர்.

    சங்கரன்கோவில் வட்டம், கண்டியப்பேரி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துமாடன் மகன் ஆனந்தமுருகன் (33). ஆட்டோ ஓட்டுநர். இவர் ஓட்டி வந்த ஆட்டோவில், அதே பகுதி வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் முத்துமாரி (55), புன்னவனப்பேரி காலனித் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் பாலசுப்பிரமணியன் (41) ஆகியோர் இருந்தனர்.

    சங்கரன்கோவிலிலிருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆட்டோ, வானரமுட்டி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியதாம்.

    இதில் ஓட்டுநர் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai