Enable Javscript for better performance
வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 28th August 2013 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீவிரவாதிகள் ஊடுருவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கப்பல்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகப் பகுதியில் தீவரவாதிகளின் கடல்வழி ஊடுறுவலை தடுக்கும் வகையில்  கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், கடலோர காவல் படையினர் மற்றும் காவல்துறையின் உதவியோடு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    துறைமுகப் பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், துறைமுக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துறைமுகத்தினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான அனுமதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் துறைமுக பொறுப்புக் கழத் தலைவர் சு. நடராஜன் அறிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai