Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநாடு

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 28th August 2013 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 23-வது ஆண்டு விழா சிறப்பு மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டுக்கு சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் வேதநாயகம் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் அய்யலுசாமி, மாவட்டச் செயலர் பிச்சையா, திருச்செந்தூர் சங்கத் தலைவர் சேவியர் லியோனிதாஸ், சாத்தான்குளம் சங்கச் செயலர் ஜோசப், நாசரேத் சங்கத் தலைவர் காசி உள்ளிட்டோர் பேசினர். ஓய்வூதியர்கள் பின்பற்ற வேண்டிய வங்கி நடைமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி ஸ்ரீவைகுண்டம் கிளை மேலாளர் புகழேந்தி பேசினார். துணைச் செயலர் துரைராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

    மாநாட்டில், மத்திய அரசு வழங்குவது போல் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், மருத்துவப்படியை உயர்த்த வேண்டும், மத்திய அரசை போன்று ஓய்வூதியர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜப்பா வெங்கடாச்சாரி நன்றி கூறினார்.

    சங்க துணைத் தலைவர் சாமி செல்லையா, பொன்னம்பலம், ஜோசப் உலகநாதன், தென்திருப்பேரை கிருஷ்ணன், கொங்கராயகுறிச்சி தாமஸ், கருங்குளம் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai