Enable Javscript for better performance
ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    By dn  |   Published on : 29th August 2013 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் சார்பில் விநாயகர் சதுர்த்திக்காக 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் வி.எஸ்.எம். கட்டடத்தில் நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் .கந்தசாமி முன்னிலை வகித்தார்.

    செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் வி.எஸ். முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது எனவும்  செப். 9 ஆம்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒருஅடி முதல் 11 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்வது எனவும், செப். 11 ஆம்தேதி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று திருச்செந்தூர் கடலில் விசர்ஜனம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மாடசாமி, கோயில்பிள்ளை, சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai