Enable Javscript for better performance
கொலை மிரட்டல்: லாரி ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே மினி லாரி ஓட்டுநருக்கு, கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    நடுவக்குறிச்சி சீமாம் அடப்புவிளையைச் சேர்ந்தவர் மூ.குமரேசன் (47). மினிலாரி ஓட்டுநர். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் ஞா. நெல்சனுக்கும் (51) தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தது தொடர்பாக முன்விரோதம் உள்ளதாம்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நெல்சனும், அவரது மனைவி மரகதமும்( 47) சேர்ந்து குமரேசனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம்.

    இதுகுறித்து, குமரேசன் தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஜூலை 25-ல் புகார் செய்தார். ஆனால் மனுவை பெற்று கொண்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குமரேசன் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இம்மாதம் 10-ம் தேதி முறையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து, குமரேசன் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தட்டார்மடம் போலீஸýக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தட்டார்மடம் போலீஸார் வழக்குப்பதிந்து நெல்சனை செவ்வாய்க்கிழமை கைது செய்து அவரது மனைவியை தேடி வருகிறார்.

    இதேபோல் சாத்தான்குளம் அருகேயுள்ள உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்தவர் மணி. இவர் புத்தன்தருவை ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார்.  அதே ஊரைச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி பத்மாவதி (30). ஊராட்சி உறுப்பினர் மணியிடம் தெருவிளக்கு முறையாக எரியவில்லை எனப் புகார் தெரிவிப்பதற்காக அவரது வீட்டிற்கு பத்மாவதி சென்றாராம். அப்போது அங்கு மணி இல்லையாம். அவரது  மனைவி பொன்மாரி இருந்தாராம். அவரிடம் பத்மாவதி தெருவிளக்கு எரியவில்லை எனத் தெரிவித்தாராம். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பொன்மாரி, பத்மாவதியை அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டார்மடம் உதவி ஆய்வாளர் வர்க்கீஸ் அம்மாள் வழக்குப் பதிவு செய்து பொன்மாரியை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai