Enable Javscript for better performance
டாக் பிரச்னை: சிஐடியூ உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மூடப்பட்ட டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி, தூத்துக்குடி ஸ்பிக்நகரில் சிஐடியூ அமைப்பினர் புதன்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி. பாலசுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். டாக் தொழிலாளர் சங்கத்தலைவர் துரையரசன், சிஐடியு மாவட்ட இணைச்செயலர் காசி, ஒருங்கிணைப்பாளர் முருகன், அனல்மின்நிலைய தொழிற்சங்க நிர்வாகி சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai