Enable Javscript for better performance
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் பழுது- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை 1-வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

     தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த யூனிட்டுகள் மூலம் நாள்தோறும் சுமார் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்பட்டு வரும் பழுது காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் கடந்த 23-ம் தேதி இரவு 3-வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாகவும், 5-வது யூனிட்டில் நிலக்கரியைச் சூடுபடுத்தும் மின்விசிறியில் ஏற்பட்ட பழுது காரணமாகவும் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.  இந்த பழுதுகளை பொறியாளர்கள் திங்கள்கிழமை இரவு சரி செய்ததைத் தொடர்ந்து செவ்வாய்ககிழமை காலை முதல் அனைத்து யூனிட்டுகளும் செயல்படத் தொடங்கின.

    இந்நிலையில், திடீரென 1-வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் பழுது ஏற்பட்டது.

    இதனால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுதைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், வியாழக்கிழமை (ஆக.29) இரவுக்குள் பழுதை சரிசெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அனல் மின் நிலையப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai