தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் பழுது
By dn | Published on : 29th August 2013 11:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 1-வது யூனிட்டில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்பட்டு வரும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனல் மின் நிலையத்தில் கடந்த 23-ஆம் தேதி இரவு 3-வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாகவும், 5-வது யூனிட்டில் நிலக்கரியைச் சூடுபடுத்தும் மின்விசிறியில் ஏற்பட்ட பழுது காரணமாகவும் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த பழுதுகளை பொறியாளர்கள் திங்கள்கிழமை இரவு சரிசெய்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் அனைத்து யூனிட்டுகளும் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், திடீரென 1-வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுதைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், வியாழக்கிழமை (ஆக.29) இரவுக்குள் பழுதை சரிசெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அனல் மின் நிலையப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.