Enable Javscript for better performance
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் புதன்கிழமை பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டி அத்தைகொண்டான் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ஜெயஸ்ரீ (39). இவர் மற்றும் இவரது உறவினர் இந்திரா ஆகிய இருவரும் நாலாட்டின்புத்தூருக்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பினார்களாம்.  பஸ் நிறுத்தத்தில் இறங்கிய இருவரும் சீனிவாசன் நகர் முதல் தெரு வழியாக அத்தைகொண்டானுக்குச் சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர், ஜெயஸ்ரீ கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம்.

      புகாரின்பேரில்  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai