Enable Javscript for better performance
மத்திய அரசின் சாதனை விளக்க ரத யாத்திரைக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் சாதனை விளக்க ரத யாத்திரைக்கு நாகர்கோவிலில் புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

    ஜி.கே. மூப்பனாரின் 11-வது நினைவு தினத்தை முன்னிட்டு களியக்காவிளை முதல் சென்னை வரை ஜோதி மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க பிரசார ரத யாத்திரை தொடங்கியது.

    நாகர்கோவில் பார்வதிபுரத்துக்கு வந்த ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    பார்வதிபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகேயும் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதில் ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ. இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai