Enable Javscript for better performance
வியாபாரி மீது தாக்குதல்: ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே வியாபாரியை தாக்கியதாக ஓய்வுபெற்ற ஆசிரியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர் பூச்சிக்காடு பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (46) . இவர் பூச்சிக்காட்டில் பந்தல் அலங்காரம் மற்றும் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் பூச்சிக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ஏ. விக்டர் (63) உள்ளார்.

     இவர், அதே ஊரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார்.  ஜெயசீலன் அவரது கடைக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுப்பதாக விக்டர், நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தாராம். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

    இதையடுத்து ஜெயசீலன், விக்டரிடம்  செவ்வாய்க்கிழமை தகராறில் ஈடுபட்டாராம்.  அப்போது விக்டர், ஜெயசீலனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வர்கீஸ் அம்மாள் வழக்குப்பதிவு செய்து விக்டரை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai