Enable Javscript for better performance
சாத்தான்குளத்தில் சைக்கிள் -பைக் மோதல்: இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் சைக்கிள் -பைக் மோதல்: இருவர் சாவு

    By சாத்தான்குளம்,  |   Published on : 30th August 2013 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளத்தில் புதன்கிழமை இரவு சைக்கிள் மீது பைக் மோதியதில், தொழிலாளி உள்ளிட்ட இருவர் இறந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள தவசியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆ. கணேசன் (50). முடிதிருத்தும் தொழிலாளி. புதன்கிழமை இரவு தனது கடையில் இருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த பைக் இவரது சைக்கிள் மீது மோதியதாம்.இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பைக்கில் வந்த சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்த பருத்தி வியாபாரி செல்வராஜ் மகன் ராஜேஷ் (25), அதே ஊரைச் சேர்ந்த ஜெயராஜ் செல்வன் மகன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான ஜான்டேனியல் தாமஸ்(19), பழனி மகன் முருகானந்தம்( 20) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் சாத்தான்குளம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ராஜேஷ் இறந்தார்.  இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai