திருச்செந்தூர் கோவிலைச் சுற்றி ரூ. 2.36 கோடியில் புதிய சாலைகள்
By திருச்செந்தூர், | Published on : 30th August 2013 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செந்தூர் பேரூராட்சியில் கோவிலைச் சுற்றி ரூ. 2.36 கோடி செலவில் புதிய சாலைகள் அமைப்பது என மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர் பேரூராட்சி சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். செயல் அலுவலர் கொ.ராஜையா, துணைத் தலைவர் தொ.ராஜநளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சன்னிதித்தெருவில் ரூ. 50 லட்சத்தில் சிமென்ட் சாலை, சந்தனமாரியம்மன் கோவில் தொடங்கி முருகன் கோவில் வரை ரூ. 27 லட்சத்தில் சிமென்ட் சாலை, சபாபதிபுரம் தெருவில் ரூ. 36 லட்சத்தில் தார்ச் சாலை, சபாபதிபுரம் தெருவில் சாலையின் இருபுறமும் ரூ. 37 லட்சத்தில் சிமென்ட் கான்கிரீட் கற்கல் பதித்தல், சன்னிதித்தெரு முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை ரூ. 45 லட்சத்தில் சிமென்ட் கான்கிரீட் கற்கள் பதித்தல், திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையம் முன்புறம் மற்றும் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரூ. 41 லட்சத்தில் சிமென்ட் கான்கிரீட் கற்கள் அமைத்தல் என மொத்தம் ரூ. 2 கோடியே 36 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஜெ.அந்தோனிட்ரூமன், மு.சுதா, தி.செந்தில்ஆறுமுகம், மா.சுதாகர், மு.வடிவேல், சு.கோமதிநாயகம், அ.சண்முகசுந்தரம், ம.அரசு மீனா, செ.இசக்கியம்மாள், மு.காளிதாஸ், ஜெரால்டு, செ.சாந்தி, மு.சுப்புலட்சுமி, வீ.முருகானந்தம், க.மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.