Enable Javscript for better performance
தூத்துக்குடியில் தாது மணல் குடோன்களில் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் தாது மணல் குடோன்களில் சோதனை

    By தூத்துக்குடி  |   Published on : 30th August 2013 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் உள்ள தாது மணல் குடோன்களில் கனிமவளத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    கனிமவளத் துறை இணை இயக்குநர் பழனிவேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இச்சோதனை மேற்கொண்டனர். தூத்துக்குடி முத்தையாபுரத்தில் துறைமுக சாலையில் உள்ள விவி மினரல் நிறுவனத்துக்குச் சொந்தமான 2 குடோன்கள், முள்ளக்காட்டில் உள்ள பிஎம்சி நிறுவனத்துக்கு சொந்தமான 2 குடோன்கள், தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் கூட்டுடன்காடு பகுதியில் உள்ள விவி மினரல் நிறுவனத்துக்குச் சொந்தமான குடோன், சிப்காட் பகுதியில் உள்ள மணல் மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான குடோன் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தாது மணல் குடோன்களிலும் இந்தச் சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai