Enable Javscript for better performance
தென்காசியில் ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    தென்காசியில் ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாள் விழா

    By தென்காசி  |   Published on : 30th August 2013 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்காசியில் ரசிகமணி டி.கே.சி.யின் 132-வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பேராசிரியர் மு. ராமச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர், பண்படுத்துவதுதான் இலக்கியம். டி.கே.சி. ரசித்ததுபோல் வாழ்க்கையின் ஒவ்வோர் அங்குலத்தையும் நாம் ரசிக்கத் தொடங்கிவிட்டால் நம்மைப்போல பாக்கியவான்கள் யாருமில்லை. டி.கே.சியின் ஆன்மாவை அடையாளம் காண்பவர்கள் ஆனந்தம் அடைவார்கள் என்றார்.

    தீட்சிதர் இறைவணக்கம் பாடினார். ராஜபாளையம் சேக்கிழார் கழகச் செயலர் கொ. பூமிநாதன், சென்னை காந்தி கல்வி நிலையம் கி. மோகன், புதுக்கோட்டை ஞானாலயா நூலக இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி பேசினர்.

    விழாவை முன்னிட்டு பொதிகை இலக்கிய வட்டம் சார்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வென்ற மாணவர்-மாணவிகளுக்கு "இளம் நாவலர்' தகுதிச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி அளவிலான போட்டியில் ஆய்க்குடி ஜே.பி.கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த உம்முசல்மா, சண்முகப்பிரியா ஆகியோர் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

    மேல்நிலைப் பள்ளி அளவிலான போட்டியில் தென்காசி புனித மிக்கேல் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த ஷாமா, தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் பள்ளி மாணவி கே. அஞ்சனசுபா ஆகியோர் முதல் இரு இடங்களையும், தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் பள்ளி மாணவர் எம். முத்துராஜ், புனித மிக்கேல் பெண்கள் பள்ளி மாணவி கௌசல்யா ஆகியோர் 3-ம் இடமும், மஞ்சம்மாள் பெண்கள் பள்ளி மாணவி ஆர். விஜயா ஆறுதல் பரிசும் பெற்றனர்.

    உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் தென்காசி காட்டுபாவா பள்ளி மாணவி செ. ரிஸ்வானா பாத்திமா, நேரு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணதிலக், அழகுசுலோச்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றனர். காட்டுபாவா  பள்ளி மாணவி உல்பத்னிசா ஆறுதல் பரிசு பெற்றார்.

    விழாவில், திருநெல்வேலி பொருனை இலக்கிய வட்டப் புரவலர் தளவாய் ராமசாமி, தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் துரை. தம்புராஜ், தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் ஆ. சிவராமகிருஷ்ணன், தீப. குற்றாலலிங்கம், தி. சுபாஷினி, புலவர் செல்வராஜ், கண்ணபிரான், ராசிசுரேஷ் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிகளை கவிஞர் ராஜாமுகம்மது தொகுத்து வழங்கினார். தீப. நடராஜன் வரவேற்றார். இரா. தீத்தாரப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai