Enable Javscript for better performance
பெரியதாழையில் தாது மணல் லாரி சிறைப்பிடிப்பு: 2-ம் நாளாக பேச்சுவார்த்தை- Dinamani

சுடச்சுட

    

    பெரியதாழையில் தாது மணல் லாரி சிறைப்பிடிப்பு: 2-ம் நாளாக பேச்சுவார்த்தை

    By சாத்தான்குளம்,  |   Published on : 30th August 2013 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில், தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவர்கள் புதன்கிழமை சிறைப்பிடித்தனர். வியாழக்கிழமை 2-ம் நாளாக அதிகாரிகள் பேச்சு நடத்தியும் லாரியை மீட்க முடியவில்லை.

    இம் மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை தொடர்பாக புகார் எழுந்ததையொட்டி தமிழக அரசு சிறப்புக்குழு நியமித்து ஆய்வு மேற்கொண்டது. இதனால் ஆய்வு அறிக்கையை தமிழக அரசு வெளியிடும்வரை இப் பகுதியில் மணல் அள்ளத் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதன்கிழமை, பெரியதாழை பகுதி வழியாக தாது மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை பெரியதாழை மீனவர்கள் சிறைப்பிடித்தனர். சாத்தான்குளம் வட்டாட்சியர் பொ. மிகாவேல் ஞானதீபம், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் நா. நாகராஜ், போலீஸார் பேச்சு நடத்தினர். ஆனால், லாரியை மீட்க முடியவில்லை.

    இந்நிலையில், 2-ம் நாளாக வியாழக்கிழமை, திருச்செந்தூர் கோட்டாட்சியர் ப. கொங்கன், சாத்தான்குளம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் சுடலைவடிவேல், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர், அதிகாரிகள் சென்று மீனவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, லாரி விடுவிக்கப்படாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறும்போது, "எங்களது மீனவக் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து பேசியுள்ளோம். லாரி, மணலைப் பறிமுதல் செய்வதுடன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்துவோம். அதுவரை லாரி விடுவிக்கப்படாது' என்றனர் அவர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai