Enable Javscript for better performance
மாணவர், மாணவிகள் வகுப்புகள் புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்கக் கோரி அப்பள்ளி மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எட்டயபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் கணக்குப் பதிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவர், மாணவிகளுக்கு புத்தகங்கள் வியாழக்கிழமை வரை வழங்கப்படவில்லையாம்.

    பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும், எந்தவித பலனும் இல்லையாம். இன்னும் சில தினங்களில் காலாண்டுத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில், புத்தகங்கள் வழங்கப்படாததையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் கணக்குப் பதிவியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவு மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1.45  மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்தவுடன் எட்டயபுரம் வட்டாட்சியர் ஜெயராணி, காவல் ஆய்வாளர் சங்கர்தேவ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மாணவர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயக்கண்ணு, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) செüந்தரநாயகி, பள்ளி துணை ஆய்வாளர் அழகிரிசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    செப்.4-ம் தேதிக்குள் கணக்குப் பதிவியல் மற்றும் கணினி அறிவியலுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் வழங்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, மாலை 4 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai