Enable Javscript for better performance
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்: 247 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்: 247 பேர் கைது

    By தூத்துக்குடி,  |   Published on : 31st August 2013 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 247 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி கிளை சார்பில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலர் ஜேம்ஸ்ராஜ் போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.

    தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோனிராஜ், செயலர் முத்தையா, பொருளாளர் சம்பத் சாமுவேல், திருநெல்வேலி மாவட்டச் செயலர் சுடலைமணி, தலைவர் ராஜ்குமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள பாளையங்கோட்டை சாலையில்  அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீஸார்  மறியலில் ஈடுபட முயன்றதாக 101 பெண்கள் உள்பட 247 பேரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai