Enable Javscript for better performance
இலுப்பையூரணி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    இலுப்பையூரணி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

    By கோவில்பட்டி,  |   Published on : 31st August 2013 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இலுப்பையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் நிர்மல் அபியான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தனி நபர் இல்ல கழிப்பறை கட்டட ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேட்டைக் கண்டித்தும், விஸ்வநாததாஸ் நகர்ப் பகுதியில் மயானக் கொட்டகை மற்றும் அடிபம்பு வசதிகளை செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். இதில், வார்டு உறுப்பினர் கருத்தப்பாண்டி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் முத்துகாந்தாரி, வட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போராட்டக் குழுவினருடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜாமணி தலைமையில் இலுப்பையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

    ஆர்ப்பாட்டம்:இலுப்பையூரணி ஊராட்சிப் பகுதிக்கு உள்பட்ட கூசாலிபட்டி, பூசாரிபட்டி, பழத்தோட்ட நகர், கைவண்டித் தொழிலாளர் காலனி, தாமஸ் நகர் ஆகிய பகுதிகளில் தனி நபர் கழிவறை கட்டுவதற்கான மானியத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்களில் ஒரு பிரிவினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai