Enable Javscript for better performance
கராத்தே போட்டிகள்: உடன்குடி பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய அளவில் நடைபெற்ற  கராத்தே போட்டிகளில் உடன்குடி சல்மா பள்ளி மாணவர்,மாணவிகள் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றினர்.

    ரியூசின் கான்சிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் 12-வது அகிய இந்திய அளவிலான

    கராத்தே போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தபுரம் விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்றது. இதில் 17 மாநிலங்களில் இருந்து மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் கவின்பிரபு முதல் இடத்தையும், கேசவன் முத்து, ஹரிகரன் ஆகியோர் இரண்டாமிடத்தையும், ஐஸ்வரன்,சூர்யபிரகாஷ்,முகமது முஸ்பிர் ,அப்ரின்ஜிசா,ரமிசாஜேஸ்மின்,அன்டன் ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

    அவர்களை பள்ளி மேலாளர் ஷபிஅஹமது,முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின்,கராத்தே ஆசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai