Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் 108 பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினம் அருகேயுள்ள லட்சுமிபுரம் ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு  108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    4 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில், திருவிளக்கு பூஜை,கடலில் புனித நீர் எடுத்து வரும் வைபவம் உள்ளிட்டவை

    நடைபெற்றன.

    ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலிலிருந்து 108 பெண்கள் பங்கு கொண்ட பால் குட ஊர்வலம் தொடங்கியது.

     பிரதான வீதிகள் வழியாகச் சென்ற  ஊர்வலம் ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai