Enable Javscript for better performance
கால்வாய்க் கரை சேதம்:  ஊராட்சித் தலைவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கால்வாய்க் கரை சேதம்:  ஊராட்சித் தலைவர் மீது வழக்கு

    By கோவில்பட்டி  |   Published on : 31st August 2013 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடம்பூர் அருகே கால்வாய்க் கரையை உடைத்ததாக பன்னீர்குளம் ஊராட்சித் தலைவர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓட்டப்பிடாரம் வட்டம், தென்னம்பட்டி ஊராட்சிப் பகுதியிலிருந்து செல்லும் கால்வாயில் ஓடும் தண்ணீர், பன்னீர்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட கீழகூட்டுப்பண்ணை பகுதிக்கு வருமாம். கடந்த ஆண்டு தென்னம்பட்டி பகுதி மக்கள் கால்வாய்க் கரையை உயர்த்தி, தண்ணீர் வரத்தை தடுத்தார்களாம்.

    இதையடுத்து இரு கிராம மக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை அடைத்து வைக்கப்பட்டிருந்த கால்வாய்க் கரையை பன்னீர்குளம் ஊராட்சிப் பகுதி மக்கள் உடைத்ததாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தென்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காளி அளித்த புகாரின்பேரில், கடம்பூர் போலீஸார் பன்னீர்குளம் ஊராட்சித் தலைவர் சிவபாண்டியன் மற்றும் பலர் மீது  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai