Enable Javscript for better performance
செப்.5-ல் ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு விழா - Dinamani

சுடச்சுட

    

    செப்.5-ல் ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு விழா

    By ஓட்டப்பிடாரம்  |   Published on : 31st August 2013 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரத்தில் வ.உ. சிதம்பரனாரின் 142-வது பிறந்த தின விழாவையொட்டி அரசு சார்பில் செப்.5-ம் தேதி விழா நடைபெறுகிறது.

    ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.  சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரா.காமாட்சி, துணைத் தலைவர் ஓ.டி.ஜெயலலிதா, ஊராட்சித் தலைவர் லதாமாசாணசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் வரவேற்கிறார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai