Enable Javscript for better performance
தூத்துக்குடியில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது

    By தூத்துக்குடி,  |   Published on : 31st August 2013 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கான விருதுகளை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வழங்கினார்.

    இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் தூத்துக்குடி கிளை சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

    விழாவில், சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

    விழாவில், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சு. நடராஜன்,  இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பின தென்பிராந்திய தலைவர் வால்டர் டிசோசா, தொழில் வர்த்தக சங்க தூத்துக்குடி கிளைத் தலைவர் டி. ஜான்சன், செயலர் டி.ஆர். கோடீஸ்வரன்,  துணைத் தலைவர் தாஜூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் இந்திய தொழில் வர்த்தக சங்க தூத்துக்குடி கிளைச் செயலர் டி.ஆர். கோடீஸ்ரவரன் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனிடம் அளித்த கோரிக்கை மனுவில்,  தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம். தூத்துக்குடி துறைமுகத்தை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம். உணவு பாதுகாப்பு மண்டலம், தூத்துக்குடி மதுரை வரையிலான இரட்டை ரயில்பாதை அமைத்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து தெரிவித்திருந்தார்.

    இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் அவர்களிடம் உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai