Enable Javscript for better performance
தூத்துக்குடியில் மறியல்: சத்துணவு ஊழியர்கள் 340 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் மறியல்: சத்துணவு ஊழியர்கள் 340 பேர் கைது

    By தூத்துக்குடி,  |   Published on : 31st August 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 340 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    தேர்தல் வாக்குறுதிப்படி சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும், தகுதியுள்ள உதவியாளர்களுக்கு சமையலர் பணி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியர் சங்கத்திலிருந்து சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரத்னாவதி தலைமையில் கருப்பு உடை அணிந்து பேரணியாகப் புறப்பட்டனர்.

    இப்பேரணியை அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலர்கள் லிங்கேஸ்வரி, ஜெயபாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் தமிழரசன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பீட்டர் பர்னபாஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட அமைப்பாளர் அல்போன்ஸ் லிகோரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பொன்சேகர், ஆனந்தசெல்வம், சீனிவாசன், ஜெயசீலன், மாரியப்பன் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து பேரணியாகச் சென்ற சத்துணவு ஊழியர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய பாகம் போலீஸார் மறியலில் ஈடுபட்டதாக 290 பெண்கள் உள்பட 340 பேரை கைது செய்தனர். மறியல் காரணமாக தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai