Enable Javscript for better performance
தூத்துக்குடியில் 2 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் 2 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

    By தூத்துக்குடி,  |   Published on : 31st August 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் 2 மீனவர்களை வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ராஜ் மகன் வினோத் (30). மினிசகாயபுரத்தைச் சேர்ந்த சேவியர் மகன் கிளைட்டன் (32). நண்பர்களான இருவரும் விசைப்படகில் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை தூத்துக்குடி தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனராம். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வினோத்தையும், கிளைட்டனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனராம்.

    காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிந்த மத்திய பாகம் போலீஸார் 4 பேரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai