பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By சாத்தான்குளம் | Published on : 31st August 2013 02:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தட்டார்மடம் அருகே பெண்ணிடம் வெள்ளிக்கிழமை தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தட்டார்மடம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் பீட்டர்ராஜ் மனைவி மிக்கேல்ஜோஸ்பின் (30). இவர், வெள்ளிக்கிழமை மாலை திசையன்விளை செல்ல அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தாராம்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மிக்கேல் ஜோஸ்பினின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனராம்.
இதையடுத்து அவர் கூச்சலிட்டு, சங்கிலியை அவர்களிடமிருந்து பிடுங்க முற்பட்டாராம். அப்போது சங்கிலி இரண்டாக உடைந்து 3 பவுன் மட்டும் மிக்கேல்ஜோஸ்பினிடம் சிக்கியது. மீதமுள்ள 2 பவுன் சங்கிலியுடன் மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.