Enable Javscript for better performance
விவேகானந்தர் ரதம் கோவில்பட்டி வருகை- Dinamani

சுடச்சுட

    

    சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழா ரதம் வெள்ளிக்கிழமை கோவில்பட்டிக்கு வந்தது.

    சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், இளைஞர்களுக்கான நல்வழிகள், ஆன்மிக சொற்பொழிவுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த ரதம் வலம் வருகிறது. சுவாமி விவேகானந்தரின் ரதம் 2 நாள்கள் கோவில்பட்டி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு கழுகுமலையிலிருந்து ரதம் புறப்பட்டு, காளாங்கரைப்பட்டி, கல்லூரணி, வானரமுட்டி, நாலாட்டின்புத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றி வந்தது.

    நண்பகல் 12 மணிக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு வந்த சுவாமி விவேகானந்தரின் 2 ரதங்களுக்கும் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமமூர்த்தி, முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.   தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் தெரு,  நகராட்சி அலுவலகம், அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் முன் ஆகிய இடங்களில் ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  சிறிய ரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லாயல் மில் காலனி, இலுப்பையூரணி பெருமாள் கோவில், புதுக்கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai