Enable Javscript for better performance
வீடு சேதம்: 8 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறு அருகே வீட்டை சேதப்படுத்தியதாக ஊராட்சித் தலைவர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    பன்னீர்குளத்தையடுத்த கீழக்கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர் நரசிம்மன் மகன் சுப்புராஜ் (61). இவர் தனது வீட்டை தென்னம்பட்டி ஊராட்சித் தலைவர் மூக்கையா உள்பட 8 பேர் சேதப்படுத்தியதாக புகார் அளித்தாராம்.  இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, ஊராட்சித் தலைவர் மூக்கையா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முருகன், பண்டாரம், வேல்சாமி, பரமசிவன், சின்னஇசக்கி, பிச்சுமணி, சரவணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வெள்ளிக்கிழமை தென்னம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சரவணனை (25) போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai