கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை அகற்றினர்.
கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இதில், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.