எட்டயபுரம் அருகே குமாரகிரியில் பெண்ணிடம் 13 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
குமாரகிரியைச் சேர்ந்தவர் சண்முகையா (50). இவரது மனைவி விஜயா (40) புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். வியாழக்கிழமை அதிகாலையில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.