எட்டயபுரம் வட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டம்குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.
இதுகுறித்து சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெகநாதன் கூறியதாவது:
வட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது. இதில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்கிறவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கலந்துகொண்டு படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம். ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை,திருமண உதவித்தொகை உள்ளிட்டவைகளைப் பெற நேரில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களின் மனுக்கள் விரைந்து தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இதை பயன்படுத்தி அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம் என்றார் அவர்.