கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பொறியியல் மற்றும் எம்.சி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 2011 - 12 ஆம் கல்வியாண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பி.இ., பி.டெக்., எம்.இ., மற்றும் எம்.சி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு பருவத்தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்தேர்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற கல்லூரியின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.