கயத்தாறு அருகே தீ விபத்தில் காயமடைந்த இளம்பெண் வியாழக்கிழமை இறந்தார்.
உசிலங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி காளீஸ்வரி(19). தம்பதிக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. இந்நிலையில் காளீஸ்வரி திங்கள்கிழமை அடுப்பை பற்ற வைத்தபோது அவர் மீது தீ பற்றியதாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்தனர். சார் ஆட்சியர் விசாரித்து வருகிறார்.