விளாத்திகுளம் அருகே வேப்பலோடையில் பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விளாத்திகுளம் அருகே கழுகாசலபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (58). இவருக்கும், இவரது உறவினரான வே. நடராஜபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மாடசாமிக்கும் (31) பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை வேப்பலோடை பேருந்து நிறுத்தத்தில் ஆறுமுகத்துக்கும், மாடசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் இருவரையும் மாடசாமி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து மாடசாமியைக் கைது செய்தனர்.