ஆறுமுகனேரி, செப். 23: ஆறுமுகனேரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் குப்பைகளை அகற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் வெ.பழனிராஜ், வட்ட பொறுப்பாளர் ம.சிவராமன், தொண்டர்கள் சக்திவேல், சா.நம்பித்துரை, சா.யோகேஷ், சத்தீஷ், ரீகன், பிரபாகரன், அரிகரன், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.