தூத்துக்குடி, செப். 23: தூத்துக்குடி அருகே கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் 17 பவுன் நகைகளை திங்கள்கிழமை இரவு திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் காசிப்பாண்டியன் (56). இவர், ஒப்பந்த அடிப்படையில் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25 ஆயிரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.