கோவில்பட்டி, செப். 23: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ. 11.92 கோடியில் குரங்கணி தனிக்குடிநீர்த் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
இதையடுத்து கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது செயல்பட்டு வரும் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமைநடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து மாணவர், மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில், கல்லூரி முதல்வர் பாண்டியன், பேராசிரியர்கள் சந்தனமாரியம்மாள், ஜோசப்சுரேஷ், சித்திரைவேல், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் லட்சுமணப்பெருமாள், நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணாசலசாமி, விவசாய அணி மாவட்ட துணைச் செயலர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜ், பாலமுருகன், கிளைச் செயலர் ரவிசந்திரன் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்கு ரூ. 11.92 கோடியில் நடைபெற்றுள்ள குரங்கணி தனிக்குடிநீர்த் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். திட்டம் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, துணைத் தலைவர் தொ.ராஜநளா, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜன், வட்டாட்சியர் ப.நல்லசிவம், திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளர் முத்து மாரியப்பன், கிராம குடிநீர்த் திட்ட நிர்வாகப்பொறியாளர் என்.சுப்பிரமணியன், பாதாள சாக்கடைத்திட்ட நிர்வாகப்பொறியாளர் லெட்சுமணப்பெருமாள், குடிநீர்த் திட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.