தூத்துக்குடி, செப். 23: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தொலைத் தொடர்பு மாவட்ட அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தூத்துக்குடி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்குழுத் தலைவர் பாலகண்ணன், செயலர் ஜெயமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். புதிய போனஸ் கணக்கீடு உருவாக்க வேண்டும்; ஆண்டு உயர்வுத்தொகை தேக்கங்களை தீர்க்க வேண்டும்; கருணை அடிப்படை பணி நியமனத்தில் உள்ள விதிகளை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.