மின்சாரம் பாய்ந்து உப்பளத் தொழிலாளி சாவு

விளாத்திகுளம் அருகே கல்லூரணியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உப்பளத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
Published on
Updated on
1 min read

விளாத்திகுளம் அருகே கல்லூரணியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உப்பளத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தூத்துக்குடி மாதா நகரைச் சேர்ந்த சாமிஅய்யா மகன் பால்ராஜ் (41). இவர் விளாத்திகுளம் அருகே கல்லூரணியில் உள்ள தனியார் உப்பளத்தில் கூலி வேலைபார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை உப்பளத்திலிருந்து  மூட்டைகளை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது உப்பளத்திற்குச் செல்லும் மின்கம்பியின் மீது எதிர்பாராதவிதமாக பால்ராஜின் உடல் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் பால்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com