தூத்துக்குடி, செப். 23: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபட்ச பேசுவதைக் கண்டித்து தூத்துக்குடியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி நிர்வாகி தேவபிரியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வழக்குரைஞர் செல்வம், யேசுதாஸ், மகாராஜன், பெருமாள், அந்தப்பன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக முழக்ககங்கள் எழுப்பப்பட்டன. தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கருப்பசாமி, மூவேந்தன், சபா, எட்வின் அண்ணாமலை உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில், கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலர் மு.ரவிகுமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
முடுக்கலான்குளம் குட்டியப்பன், கூசாலிபட்டியைச் சேர்ந்த அய்யாச்சாமிபாண்டியன், தாமஸ்பாண்டியன், பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த சுப்புராஜ், சுதாகர் மற்றும் புதூர் காளிராஜ், கழுகுமலை சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.