ஸ்ரீவைகுண்டம் புனித ஜேம்ஸ் கோல்பிங் குடும்ப சபை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கோல்பிங் குடும்ப சபை தலைவர் செபத்தியான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மெட்டிலா ராணி, செயலர் பெனடிக், பொருளாளர் பிலவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் பங்குத்தந்தை மற்றும் புனிதஜேம்ஸ் கோல்பிங் குடும்ப சபை இயக்குநர் ரவீந்திரன் 4 மாணவிகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு கல்விக்கான உதவித்தொகையாக ரூ 25 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புனித ஜேம்ஸ் கோல்பிங் குடும்ப சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.