Enable Javscript for better performance
அதிமுகவை ஆதரித்து பிரசாரம்: அகிலஇந்திய பார்வர்டு பிளாக் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவை ஆதரித்து பிரசாரம்: அகிலஇந்திய பார்வர்டு பிளாக் முடிவு

    Published on : 27th March 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுகவை ஆதரித்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கதிரவன், கோவில்பட்டியில் புதன்கிழமை எம்.எல்.ஏ. கடம்பூர் செ. ராஜுவை சந்தித்து தேர்தல் பிரசாரம் குறித்துப் பேசினார். பின்னர், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கயத்தாறு, திருமங்கலக்குறிச்சி, செட்டிக்குறிச்சி, வானரமுட்டி, இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, காந்தி நகர் மற்றும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்வது குறித்துப் பேசினர்.

    அப்போது, பார்வர்டு பிளாக் கட்சியின், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச்செயலர் முருகேசப்பாண்டியன், மாவட்டச் செயலர் அழகுபாண்டி, மாவட்டத் தலைவர் பாலமுருகன், ஒன்றியச் செயலர் பொன்இருளாண்டி மற்றும் அதிமுக ஒன்றியச் செயலர் அய்யாத்துரைபாண்டியன், முன்னாள் நகரச் செயலர் விஜயபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  முன்னதாக அவர் பயணியர் விடுதி அருகே உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai