Enable Javscript for better performance
ஆம் ஆத்மி வேட்பாளர் ம. புஷ்பராயன் மார்ச் 29-ல் வேட்புமனுத் தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி வேட்பாளர் ம. புஷ்பராயன் மார்ச் 29-ல் வேட்புமனுத் தாக்கல்

    Published on : 27th March 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் ம. புஷ்பராயன் மார்ச் 29-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின், தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாந்து புதன்கிழமை அளித்த பேட்டி:

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம. புஷ்பராயன் மார்ச்  29-ம் தேதி தூத்துக்குடி வருகிறார். அன்று காலை 10 மணிக்கு பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு ஜெபம் செய்கிறார். பின்னர் தெற்கு கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் தேர்தல் பணி அலுவலகத்தை முறைப்படி அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர், பொதுமக்களிடம் பேசும் அவர், பனிமய மாதா பேராலயம் முன்பிருந்து அனைத்து சமுதாய மக்களின் ஆதரவோடு வி.இ. சாலை, பாளையங்கோட்டை சாலை வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகல் 11.30 மணிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

    பின்னர், தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர், குருக்கள், தென்னிந்திய திருச்சபை பேராயர்கள், கிறிஸ்தவ, இந்து மத, இஸ்லாமியத் தலைவர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரையில் இருந்து வெளியே வராத ம. புஷ்பராயன் தூத்துக்குடியில் உள்ள தனது தாய், தந்தையரின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

    பின்னர், பெரியதாழையிலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். தேசிய, திராவிட கட்சிகளுக்கு முடிவுகட்டும் வகையில் ஆம் ஆத்மியின் பிரசாரம் தீவிரமாக இருக்கும்.

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றால் செய்யப்படும் வாக்குறுதிகள் குறித்து மார்ச் 30-ம் தேதி தனது தேர்தல் வாக்குறுதிகளை வேட்பாளர் ம. புஷ்பராயன் தெரிவிப்பார் என்றார் அவர். பேட்டியின்போது, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பணிக் குழு நிர்வாகிகள் சேவியர் வாஸ், சங்கர நாராயணன், நவீன், முத்துகுமார், ஜான்பீட்டர், ஜாய் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai