Enable Javscript for better performance
என்.எஸ்.எஸ். மாணவர்கள் கள ஆய்வுப் பணி - Dinamani

சுடச்சுட

    

    குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

    திட்ட அலுவலர் சுப்பாராஜு தலைமையில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கழுகுமலை உள்ளிட்ட சுமார் 15  கி.மீ. சுற்றளவில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். இதில், விவசாயிகள் பயிர் செய்துள்ள பயறு வகைகள், தாக்கும் பூச்சி நோய்கள், பயன்படுத்திய இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சி, பூஞ்சன கொல்லி மருந்துகள், மகசூல், மழையளவு, வானிலை மாற்றம், நிலத்தடி நீர் ஆகியவற்றை பற்றி அறிதல் மற்றும் கடந்த ஆண்டு விளைச்சலோடு ஒப்பிடுதல் ஆகியன குறித்த கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

    மேலும், வீட்டுமனைகளாகும் விளை நிலங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், விவசாயப் பணிகள் மீது இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டதாக திட்ட அதிகாரி சுப்பாராஜு தெரிவித்தார். மாணவர்களின் இக்களப் பணியை கல்வித் துறை அதிகாரிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai