Enable Javscript for better performance
கோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி

    Published on : 27th March 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட மந்தித்தோப்பு, நாலாட்டின்புத்தூர் பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மனிதச் சங்கிலி நடைபெற்றது.

    நாலாட்டின்புத்தூரில் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற பேரணி, மனிதச் சங்கிலிக்கு சார்ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து, தொடக்கிவைத்தார். இதில் பங்கேற்ற மாணவர்கள், அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு சாலைகள் வழியாக பேரணி, முடுக்குமீண்டான்பட்டி அருகேயுள்ள கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நம்மாழ்வார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யனார், ஆறுமுகலட்சுமி, மண்டல அலுவலர் லூர்துமேரி உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    இதேபோல, மந்தித்தோப்பில் புனித ஓம் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai