Enable Javscript for better performance
சாத்தான்குளம் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலர் அ. பரமசிவன் தலைமை வகித்தார். இதில், சாத்தான்குளம் ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவராக ஏ. செல்வகணேஷ், ஒன்றிய பொதுச் செயலராக என். பாலமுருகன், ஒன்றியச் செயலர்களாக டி. மதிசெல்வன், டி. இசக்கி, எஸ். சுப்புஇசக்கி ஆகியோரும், ஒன்றிய துணைத் தலைவர்களாக பி. கிருஷ்ணன், எஸ். சரவணன், எம். மணிராஜா ஆகியோரும், பொருளாளராக ஆர். செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்களாக வி.ஆர். குமார், அச்சுதன், எஸ். சந்திரசூரியன், ரெங்கன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில், பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி  பிரதமராக, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டி, கிராமங்களில் பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai