Enable Javscript for better performance
செண்பகவல்லி அம்மன் கோயிலில் ரூ. 8.40 லட்சம் உண்டியல் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ. 8.40 லட்சம் காணிக்கை பணம் கிடைத்தது.

     கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகேயுள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்களில் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

    திருநெல்வேலி இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், தூத்துக்குடி இந்து அறநிலையத் துறை ஆணையர் செல்லத்துரை, கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், கோயில் ஆய்வாளர் மாரியப்பன், கோவில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்கள் மற்றும் விஸ்வகர்மா பள்ளி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், மொத்தம் ரூ. 8,40,320 ரொக்கமும், தங்கம் 81 கிராமும் மற்றும் வெள்ளி 125 கிராமும் கிடைத்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai