Enable Javscript for better performance
திருச்செந்தூரில் திமுக செயல்வீரர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் நகர திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கீழரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகரச் செயலர் பெ. மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் செ. வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹெச். வில்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணல்மேடு மா.சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சொ.சு. தமிழினியன், ஆதித்தமிழர் பேரவை திருச்செந்தூர் நகரத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட திமுக செயலர் என். பெரியசாமி, திருச்செந்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் தி. செந்தில்ஆறுமுகம், மா. சுதாகர், சு. கோமதிநாயகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் காமராஜ், திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் முரசு தமிழப்பன், ஒன்றிய பொறுப்பாளர் மு.தமிழ்பரிதி, முன்னாள் நகர திமுக செயலர் ஆ. கோபால், நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ். வெங்கடேஷ், நகர மாணவரணி அமைப்பாளர் சு. முத்துகுமார் கண்ணன், வேல்ராமகிருஷ்ணன், பேச்சாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக ஒன்றிய பொறுப்பாளர் செங்குழி ஏபி. ரமேஷ் வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai