Enable Javscript for better performance
மது விற்பனையில் ஈடுபட முயன்ற இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறில், அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட முயன்ற இளைஞரை  கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

     கயத்தாறு காவல் நிலைய தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் உமாமகேஸ்வரி தலைமையில், போலீஸார் கயத்தாறு பிரதானச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

     அப்போது பிரதானச் சாலையில், சந்தேகத்திற்கிடமான நிலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞரைச் சோதனையிட்ட போது, அவர் வைத்திருந்த பையில் 48 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

     அவரிடம், போலீஸார் நடத்திய விசாரணையில், கங்கைகொண்டான் அருகேயுள்ள பிராஞ்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 48 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai